ஜெயலலிதா, எடப்பாடி போட்டோவோடு கொடுக்கப்பட்ட ஸ்கூல் பேக்! முதல்வருக்கு பாராட்டு!!

புத்தகப்பை

தமிழகத்தில் இன்றைய தினம் அனைத்து பள்ளி திறக்கப்பட்டன. இதனால் இன்றைய தினம் மாணவர்கள் பலரும் மிகுந்த உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்றனர். அவர்களுக்கு முதலமைச்சர் அறிவித்தப்படி மிகுந்த வரவேற்பு வழங்கப்பட்டது.மு க ஸ்டாலின்

இந்த நிலையில் முன்னாள் முதல்வரின் புகைப்படத்தை நீக்காமல் இலவசப் பள்ளி புத்தகப்பையை வழங்கியது பலருக்கும் நெகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்த சம்பவம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.

அந்தப்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மணிமங்கலம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு இனிப்புகள், புத்தகம், பேனா என அனைத்தும் வழங்கப்பட்டன.

அதோடு மட்டுமல்லாமல் முந்தைய முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படம் அடங்கிய புத்தகப்பையையும் வழங்கப்பட்டன. இது குறித்து பலரும் முதல்வர் முக ஸ்டாலின் இந்த செயலுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்த புத்தகத்தப்பையில் உள்ள படங்களை நீக்காமல் கொடுப்பதால் அரசுக்கு ரூபாய் 13 கோடி ரூபாய் மிச்சமானதாக கருதபடுகிறது.இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் தலைவர் தியாகராஜன்  பேட்டி அளித்தார். அதோடு மட்டுமில்லாமல் மிச்சமாகும் பணத்தை வேறு திட்டங்களுக்கு பயன்படுத்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print