இரவு தொடங்கிய மழை; திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் குறிப்பிட்ட நான்கு மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுவிக்கப்பட்டது. அதன்படி திருநெல்வேலி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, நீலகிரி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது.

இதனால் நீலகிரி மற்றும் கன்னியாகுமரி பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றன. எனவே கனமழையின் காரணமாக அடுத்தடுத்து பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது.

நேற்றைய தினமே நீலகிரி மாவட்டம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்தார். இந்த உத்தரவை மீறி ஏதேனும் கல்வி நிறுவனங்கள் இயங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்தார்.

இன்றைய தினம் காலை முதல் தொடர்ந்து அடுத்தடுத்து ஒவ்வொரு மாவட்டமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி முதலில் தேனி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கூறியிருந்தார்.

அதன் வரிசையில் தற்போது திருவாரூர் மாவட்டமும் இணைந்துள்ளது. ஏனென்றால் திருவாரூர் மாவட்டத்தில் மழையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் இரவு தொடங்கி தொடர்ந்து மழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment