Connect with us

ஸ்ரீமதி விவகாரம்: சிபிசிஐடி கேட்ட கேள்வியால் திணறிய பள்ளி நிர்வாகிகள்!!

death 1

தமிழகம்

ஸ்ரீமதி விவகாரம்: சிபிசிஐடி கேட்ட கேள்வியால் திணறிய பள்ளி நிர்வாகிகள்!!

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பள்ளி தாளாளர் உட்பட 5 பேரிடமும் சிபிசிஐடி போலீஸார் 12 மணிநேரம் விசாரணை நடத்தினர்.

அப்போது மாணவியிடம் அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக மாணவி ஸ்ரீமதி எந்த கல்வியாண்டில் பள்ளியில் சேர்ந்தார், எந்த ஆண்டு பள்ளி விடுதியில் சேர்ந்தார், விடுதியில் சக மாணவிகள் யாரிடம் பழகி வந்தார் என கேள்விகள் கேட்கப்பட்டது.

அதேபோல் மாணவியின் பள்ளி கட்டணம், விடுதி கட்டணம் எவ்வளவு என்றும் மாணவிக்கு பாடம் கற்பித்த ஆசிரியர்கள் யார் மற்றும் மாணவி இறப்பிற்கு முன்பு சிறப்பு வகுப்பில் இருந்து மாணவி எத்தனை மணிக்கு விடுதியில் சென்றார் போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டது.

இந்நிலையில் ஸ்ரீ மதியின் தற்கொலைக்கு யாராவது டார்ச்சர் செய்தார்களா? போன்ற கேள்விகள் கேட்கப்பட்டது. இருப்பினும், ஒருசில கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் திணறியதாக கூறப்படுகிறது.

மேலும், இவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஸ்ரீமதியின் உடன் விடுதியில் தங்கியிருந்த சக மாணவிகளிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top