Connect with us

மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம்-இன்று முதல் தொடக்கம்!!

1000 rupee for girl student

தமிழகம்

மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம்-இன்று முதல் தொடக்கம்!!

தற்போதைய தமிழக அரசான திராவிட முன்னேற்ற கழகம் அரசு கடந்த ஆட்சியில் நடைமுறையில் இருந்த பல திட்டங்களை நடைமுறையில் வைத்துள்ளது. ஒரு சில திட்டங்களை மாற்றி அமைத்துள்ளதாக தெரிகிறது.

அவற்றுள் ஒன்றுதான் தாலிக்கு தங்கம் திட்டத்திற்கு பதிலாக உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம். இந்த திட்டம் இன்றைய தினம் முதல் தமிழகத்தில் தொடங்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அரசு பள்ளியில் படித்து உயர்கல்வி சேர்ந்த மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தரும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் என்று துவக்கி வைக்கிறார்.

புதுமைப்பெண் என்ற பெயரிலான திட்டத்தை சென்னை ராயபுரம் பாரதி மகளிர் கல்லூரியில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து உயர்கல்விக்காக கல்லூரியில் சேர்ந்த மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தரப்படும்.

திட்டத்தின் முதற்கட்டமாக சுமார் ஒரு லட்சம் மாணவிகளுக்கு வங்கி கணக்குகளில் மாதம் ஆயிரம் ரூபாய் நேரடியாக வரவு வைக்கப்படும். விழாவில் 26 தகைசால் பள்ளிகளையும், 15 மாதிரி பள்ளிகளையும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைக்கிறார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top