Connect with us

செம்ம வைரல்!! சிறியவர்கள முதல் பெரியவர்கள் வரை தெறிக்கவிட்ட பீஸ்ட் பட பாடல்..

cropped-Arabic-kuthu-song-to-be-released-as-a-Valentines-Day-special.png

பொழுதுபோக்கு

செம்ம வைரல்!! சிறியவர்கள முதல் பெரியவர்கள் வரை தெறிக்கவிட்ட பீஸ்ட் பட பாடல்..

செம்ம வைரல்!! சிறியவர்கள முதல் பெரியவர்கள் வரை தெறிக்கவிட்ட பீஸ்ட் பட பாடல்..

காதலர் தினத்தன்று பீஸ்ட் படத்தில் விஜய் பூஜா ஹெக்டே நடனமாடும் அரபி குத்துப்பாடல் சன் பிக்சர்ஸ் வெளியிட்டது முதல் தற்போது வரை அந்த பாடல் சமூகவலைதளங்களை முழுமையாக ஆக்கிரமித்து உள்ளது.

யூடியூபிப்பில் 48 மணி நேரங்களில் சுமார் மூன்று அரை கோடி பார்வையாளர்களை பெற்று இந்த பாடல் சாதனைப்படைத்துள்ளது. இந்நிலையில் ஒரு பாடல் ஹிட்டானாலே அதனை ரசிகர்கள் ரீல் செய்து மகிழ்வது வாடிக்கை.

அந்த வகையில் தற்போதைய ட்ரெண்டில் அரபிக் குத்து பாடல்தான். அரபிக் கூத்து என்றால் அரபிக் குத்து ஸ்டைலில் பாலைவனத்தில் ஒட்டகத்தை வைத்து அதன் அருகில் ஷேக்குகள் ஹெலன் மேரி ஹாப்பி பாடலுக்கு நடனமாடும் பாடலுக்கு நடனம் ஆடும் காட்சி வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

சின்னஞ்சிறு மழலை ஒன்று பாடலின் இசைக்கேற்ப கை, கால்களை அசைத்து நடனமாடும் காட்சி காண்போரை உற்ச்சாகம் அடைய வைத்துள்ளது. குழந்தைகள் மட்டுமன்றி 60 வயதை கடந்தவர்கள் கூட அரபி குத்து பாடலை விட்டுவைக்கவில்லை.

மூதாட்டி ஒருவர் தனது பேரனுடன் அரபி குத்து பாடலுக்கு ஆட்டம் போட மற்றொருவர் கூலிங்கிளாஸ் இல் அணிந்தப்படி வீட்டில் தனியாக நடனமாடுகிறார். அரபி குத்து பாடல் ஃபீவர் மருத்துவமனையும் எட்டிவிட்டது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூதாட்டி ஒருவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அரபிக் குத்து  பாடலை கேட்டு ரசிக்கும் காட்சி உச்சக்கட்டம்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அரபி குத்து பாடலை கொண்டாடி ரசித்துக்கொண்டிருக்க படத்தின் நாயகியான பூஜா ஹெக்டே மாலத்தீவின் கப்பலில் இருந்தபடியே நடனமாடி வலைதளத்தில் வெளியிட்ட வீடியோ ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

யூடியூப் ,பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் எந்த சமூக வலைத் தளத்தை நோக்கினாலும் அரபி குத்துப்பாடலே ட்ரெண்டிங்கில் முன்னணியில் இருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய் நடித்திருக்கும் பீஸ்ட் படத்தில் மீதான எதிர்பார்ப்பை இந்தப்பாடல் மேலும் எகிற செய்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top