மீண்டும் பயங்கரம்.. சிதறிய மனித எலும்புகள்.. குமரியில் பரபரப்பு..!!

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே வயல்வெளியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த மனித எலும்புகளை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அடுத்த சோழக்கட்டு அணை பகுதி ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியாக காணப்படுகிறது. அதோடு வயல்வெளிகள் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.

மின்சார வசதி! தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு!!

இந்நிலையில் சுமார் 40-வயது மதிப்பு தக்க ஆணின் முதுகு, கை, கால் எழும்புகள் ஆங்காங்கே சிதறி கிடந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே மேய்ச்சலுக்கு சென்ற பொதுமக்கள் காதல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவறிந்து விரைந்து வந்த போலீசார் எழும்பு கூடுகளை கைப்பற்றி விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர். அதே சமயம் காணமல் போன நபர்கள் குறித்து 2 தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரேஷன் கடைகளில் கருவிழி முறை: அமைச்சர் தொடங்கி வைத்தார்.!!

இதனையடுத்து மனித எழும்புகள் தடவியல் நிபுணர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இத்தகைய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment