AI டெக்னாலஜியை பயன்படுத்தும் SBI வங்கிகள்.. இத்தனை பயன்களா?

AIஎன்ற டெக்னாலஜி தற்போது உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் நிலையில் எஸ்பிஐ வங்கி அதிகாரப்பூர்வமாக இந்த டெக்னாலஜியை பயன்படுத்த இருப்பதாக கூறப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

AI என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் மெஷின் லர்னிங் ஆகிய தொழில்நுட்பங்களை எஸ்பிஐ வங்கி பயன்படுத்த இருப்பதாக கூறியுள்ளது. இந்த டெக்னாலஜி மூலம் மோசடி பரிவர்த்தனைகளை கண்டுபிடிக்கலாம் என்றும் மிக துல்லியமாக மோசடி செய்பவர்களின் பண பரிவர்த்தனைகளை கண்டுபிடிக்க AIடெக்னாலஜி உதவி செய்கிறது என்றும் கூறியுள்ளனர். இதனால் எஸ்பிஐ வங்கிக்கு மில்லியன் கணக்கான மோசடி இழப்பு குறைகிறது என்று கூறப்படுகிறது.

அதேபோல் வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்த எஸ்பிஐ வங்கி AIடெக்னாலஜி மற்றும் மெசின் லேர்னிங் டெக்னாலஜியை பயன்படுத்துகிறது. வாடிக்கையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் அளிக்கவும் வாடிக்கையாளர்களின் சிக்கல்களை தீர்க்கவும் எஸ்பிஐ வங்கி AI சாட்போட்டை உருவாக்கி இருப்பதாகவும் இந்த சாட்போட் தற்போது வெற்றிகரமாக வாடிக்கையாளர்களின் அனைத்து அழைப்புகளையும் சந்தித்து குறைகளை தீர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் எஸ்பிஐ வங்கி கடன் சார்ந்த சில முடிவுகளை எடுக்கவும் AI டெக்னாலஜியை பயன்படுத்துகிறது. எஸ்பிஐ விதிமுறைகளுக்கு இணங்க கடன் கேட்பவர்கள் இருக்கிறாரா? கடன் கேட்பவர்களுக்கு தகுதி இருக்கிறதா என்பதை கண்டறியக்கூடிய வகையில் AIடெக்னாலஜி மாதிரிகளை உருவாக்கி உள்ளதாகவும் அதே போல் அபராதங்களை தவிர்ப்பது, அபராதங்கள் விதிப்பது ஆகியவற்றுக்கும் எஸ்பிஐ வங்கிக்கு AI டெக்னாலஜி உதவி செய்வதாகவும் கூறப்படுகிறது.

AI தொழில்நுட்பம் தற்போது அனைத்து துறைகளிலும் வளர்ந்து வரும் நிலையில் வங்கித் துறைகளிலும் மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மோசடிகளை கண்டுபிடிப்பது, பண இழப்புகளை குறைத்தல், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை அளித்தல் உள்பட பல்வேறு பயன்பாடுகள் AI டெக்னாலஜியை பயன்படுத்துவதன் மூலம் இருப்பதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. எஸ்பிஐ வங்கியை அடுத்து மேலும் சில வங்கிகளும் AI டெக்னாலஜியை பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews