
செய்திகள்
எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு பேரதிர்ச்சி… 2வது முறையாக கடன் வட்டி அதிகரிப்பு!
பாரத ஸ்டேட் வங்கி இரண்டாவது முறையாக கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.
வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி கடந்த 4ம் தேதி உயர்த்தியது. இதன் தொடர்ச்சியாக வங்கிகளும் தனது வாடிக்கையாளர்களுக்கான கடன் வட்டியை உயர்த்தி வருகின்றன.
இந்தியாவிலேயே மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கான கடன் வட்டியை 0.1 சதவீதம் அதிகரிப்பதாக அறிவித்துள்ளது.
இவ்வட்டி உயர்வு ஏற்கனவே எஸ்பிஐ வங்கியில் கடன் வாங்கியவர்களுக்கும், புதிதாக கடன் வாங்க உள்ளவர்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடன் வாங்கியவர்களுக்கான வட்டி விகிதத்தை கடந்த மாதம் தான் 0.1 சதவீதமாக உயர்த்திய நிலையில், தற்போது இரண்டாவது முறையாக பாரத ஸ்டேட் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
