எஸ்பிஐ வங்கியில் லோன் வாங்கியவர்களுக்கு ஆப்பு.. அதிர்ச்சி அறிவிப்பு!

எஸ்பிஐ வங்கியில் லோன் வாங்கியவர்களுக்கு வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை சமீபத்தில் 0.35% உயர்த்தியது என்பதும் இதனை அடுத்து லோன் வட்டி விகிதங்கள் உயரும் என்று கூறப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

sbi loan1

இந்த நிலையில் இந்தியாவின் முன்னணி பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி லோன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் இதுவரை வீட்டுக் கடனுக்கு 8.55% வட்டி ஆக இருந்த நிலையில் தற்போது அது 8.90 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் தனிநபர் கடன் வாகன கடன் ஆகியவைகளுக்கும் விரைவில் வட்டி விகிதம் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

sbi loan

ஒவ்வொரு முறையும் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்படும் போது லோன்களுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்படும் அல்லது தவணைத் தொகை அதிகரிக்கும் என்பதால் லோன் வாங்கியவர்களின் பாடு திண்டாட்டமாக உள்ளது. ஆனால் அதே நேரத்தில் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்படும் போது பிக்சட் டெபாசிட்டிற்கான வட்டி விகிதமும் உயரும் என்பதால் பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்தவர்களுக்கு கொண்டாட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.