SBI: எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்… இனி மிஸ்டு கால் கொடுத்தாலே போதும்!

எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்கள் வங்கி ஏடிஎம் அல்லது வங்கிக்கோ செல்லாமல் மினி ஸ்டேட்மெண்ட் பெறும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

SBI புதிய சேவை அறிமுகம்:

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் பேங்க் தனது வாடிக்கையாளர்களுக்கு பல சேவைகளை வழங்கி வருகிறது. வாடிக்கையாளர்களின் வசதிக்காக வங்கி கிளைகளுக்கு செல்லாமல் நெட் பேங்கிங், எஸ்எம்எஸ் வசதி, மொபைல் பேங்கிங் உள்ளிட்ட பல சேவைகளை வழங்குகிறது.

தொலைபேசி மற்றும் ஆப் மூலமாகவும் சேவைகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக வங்கிக்கே செல்லாமல் வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கு இருப்பு எவ்வளவு என்பதை அறிய அவ்வப்போது புதுப்புது அம்சங்களை வெளியிட்டு வருகின்றனர்.

தற்போது அந்த வரிசையில் மினி ஸ்டேண்ட் பெற புதிய வசதியை எஸ்பிஐ வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவை மூலமாக வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கில் எவ்வளவு தொகை உள்ளது, எவ்வளவு செலவாகிறது, கடைசி இருப்பு எவ்வளவு போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலாம். வங்கிக் கட்டணங்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

மிஸ்டு கால் கொடுத்தாலே போதும்:

எஸ்பிஐ வங்கி கணக்கு மினி ஸ்டேட்மென்ட்டை அறிய, எஸ்பிஐ விரைவு வங்கி, மிஸ்டு கால் பேங்கிங், எஸ்எம்எஸ் பேங்கிக், மொபைல் மற்றும் நெட் பேங்கிங் என பல வழிகளில் உள்ளன. இந்த அனைத்து சேவைகளையும் பெற மொபைல் எண்ணை வங்கி கணக்கில் பதிவு செய்ய வேண்டும். NEFT, RTGS, IMPS, UPI பரிவர்த்தனைகள் அனைத்தும் இந்த மினி ஸ்டேட்மெண்டில் தெரியும். நீங்கள் மினி ஸ்டேட்மென்டை ஆஃப்லைனிலும் ஆன்லைனிலும் பார்க்கலாம்.

ஆக்டிவேட் செய்வது எப்படி?

பேங்க் பேலன்ஸ், மினி ஸ்டேட்மென்ட் ஆகியவற்றை அறிய, ஒரு எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் போதும். சில நிமிடங்களிலேயே பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு, அனைத்து விவரங்களும் மெசேஜ் வடிவில் வந்துவிடும். இந்த சேவையை பயன்படுத்த எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் 9223766666 என்ற டோல் ஃப்ரீ எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். அடுத்த நிமிடமே உங்களுடைய பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு மினி ஸ்டேட்மெண்ட் எஸ்எம்எஸ் வடிவில் வந்துசேரும்.

உங்களுக்கு எஸ்பிஐ மினி ஸ்டேட்மென்ட் வேண்டுமானால் 09223866666. இந்த எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால்.. உங்களின் கடைசி 5 பரிவர்த்தனைகள் மெசேஜ் வடிவில் பெறப்படும். இது உங்கள் கணக்கு இருப்பையும் காட்டும். இதற்கு மேலே குறிப்பிட்ட எண் தேவையில்லை. பேங்க் பேலன்ஸ் அல்லது ஸ்டேட்மெண்ட் வேண்டுமானால் மட்டும் இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் எண் வங்கிக் கணக்கிற்கு மேலே குறிப்பிட்ட சேவைகளை ஆக்டிவேட் செய்ய, பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணைக் கொண்டு ஈசியான வழியையும் எஸ்பிஐ வழங்கியுள்ளது. REG என இடம் கொடுத்து கணக்கு எண்ணை டைப் செய்தால் போதும்..09223488888 எண்ணுக்கு SMS அனுப்பவும். உடனடியாக உங்களுக்கு எஸ்எம்எஸ் வங்கி சேவைகள் ஆக்டிவ் செய்யப்பட்டதாக எஸ்பிஐயிடம் இருந்து அதிகாரப்பூர்வ குறுஞ்செய்தி கிடைக்கப்பெறும். அதன் பின்னர் எஸ்பிஐ டோல் ஃப்ரீ எண்களுக்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் ஸ்டேட்மெண்ட், மினி ஸ்டேட்மெண்ட் உள்ளிட்ட வசதிகளை நீங்கள் பெறலாம்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.