சிபிஐக்கு மாறுகிறது எஸ்பிஐ வங்கி கொள்ளை வழக்கு: சென்னை காவல் ஆணையர் தகவல்!

6bd450683ce898b9ab9b7e5ae8696c30

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் எஸ்பிஐ ஏடிஎம் வங்கியில் நூதனமான முறையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 

முதலில் தமிழக காவல்துறை இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில் அதன் பின்னர் சிபிசிஐடி இந்த வழக்கை விசாரித்தது. இந்த நிலையில் தற்போது எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளை வழக்கை சிபிஐக்கு மாற்ற பரிந்துரைக்க இருப்பதாக சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் அவர்கள் தெரிவித்துள்ளார் 

எஸ்பிஐ ஏடிஎம் வங்கியில் தமிழகத்தில் கைவரிசை காட்டுவதற்கு முன்னர் இந்தியாவின் பல மாநிலங்களில் தங்களுடைய கைவரிசையை காட்டி இருப்பதாகவும் இதுவரை வந்த தகவலின் படி 16 மாநிலங்களில் உள்ள எஸ்பிஐ வங்கியில் 5 கோடி ரூபாய் பணத்தை அவர்கள் கொள்ளை அடித்திருப்பதாகவும் இதன் காரணமாக இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற பரிந்துரை செய்ய இருப்பதாக சென்னை காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார். இதனால் இந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment