Connect with us

எஸ்.பி.வேலுமணி வீட்டில் ரெய்டு: இதுவரையில் சிக்கியது எவ்வளவு தெரியுமா ?

velumani

Tamil Nadu

எஸ்.பி.வேலுமணி வீட்டில் ரெய்டு: இதுவரையில் சிக்கியது எவ்வளவு தெரியுமா ?

எஸ்.பி.வேலுமணி வீட்டில் ரெய்டு: இதுவரையில் சிக்கியது எவ்வளவு தெரியுமா ?

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதனிடையே எஸ்.பி.வேலுமணி வீட்டில் இன்று மீண்டும் லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர்.

இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது சகோதரர் அன்பரசன் மற்றும் அவரது நெருக்கிய உறவினர்கள் என 17 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆய்வு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.

அதில் 59 இடங்களில் (கோயம்புத்தூர்-42, திருப்பூர் -2, சேலம்-4, நாமக்கல் – 1, கிருஷ்ணகிரி -1, திருப்பத்தூர்-1, சென்னை – 7 மற்றும் கேரள மாநிலம் ஆனைகட்டி-1) ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையினரால் இன்று (15.3.2022) சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளது.

எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்ற நிலையில் 11.153 கிலோ கிராம் தங்க நகைகள், 118.506 கிலோ வெள்ளி கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாகவும் கணக்கில் வராத பணம் ரூ.84,00,000/-, சான்று பொருட்களான கைப்பேசிகள், பல வங்கிகளின் பாதுகாப்பு பெட்டக சாவிகள் கைப்பற்ற பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கணினி ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் வழக்கிற்குத் தொடர்புடைய ஆவணங்கள் மற்றும்  சுமார் ரூ.34,00,000/- அளவுக்கு பலதரப்பட்ட கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்திருப்பாக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top