குளிர்காலத்துக்கு குட் பாய்; வந்துவிட்டது வறண்ட வானிலை!!

நம் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பனிக்காற்றின் வீரியம் அதிகமாக காணப்பட்டது. அதுவும் குறிப்பாக மலை பிரதேச பகுதிகளில் பனிமூட்டம்  போன்று பனிக்காற்று காணப்பட்டது.

இதனால் மக்கள் மிகவும் சிரமத்தில் இருந்தனர். இந்த நிலையில் தை மாதத்திற்கு பின்பு தமிழகத்தில் எப்போதும் குளிர்கால வானிலை சற்று மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி தமிழகத்தில் இன்று முதல் வருகின்ற இருபதாம் தேதி வரை வறண்ட வானிலேயே நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியது. இருப்பினும் கூட நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் காணப்படுகின்ற மலையோர பகுதிகளில் மட்டும் இரவு நேரத்தில் உறைபனிக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தலைநகர் சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.