Connect with us

சீக்கிரம் எங்களை காப்பாத்துங்க!! குடிக்க தண்ணீர் கூட இல்லை: இந்திய மாணவர்கள்

ukraine students

செய்திகள்

சீக்கிரம் எங்களை காப்பாத்துங்க!! குடிக்க தண்ணீர் கூட இல்லை: இந்திய மாணவர்கள்

சீக்கிரம் எங்களை காப்பாத்துங்க!! குடிக்க தண்ணீர் கூட இல்லை: இந்திய மாணவர்கள்

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடுமையாகப் போர் புரிந்து வருகிறது. அதனால் உக்ரைன் நாட்டிலுள்ள வெளிநாட்டவர்கள் தங்களது நாட்டிற்கு திரும்பி கொண்டு வருகின்றனர். அதன்படி இந்திய மாணவர்கள் பலரும் உக்ரைன் நாட்டில் படித்துக் கொண்டு வருகின்றனர்.

அவர்களை விமானங்கள் மூலம் அண்டை நாடுகளின் உதவியோடு இந்தியா தாயகம் கொண்டு சேர்த்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை சுமார் 130 ரஷ்யா பேருந்துகள் மூலம் இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ரசியா அறிவித்திருந்தது.

இவ்வாறுள்ள நிலையில் உக்ரேனின் சுமி பகுதியில் இந்திய மாணவர்கள் 600 பேர் சிக்கியுள்ள மென்று மாணவ-மாணவிகள் வீடியோ எடுத்து அரசுக்கு தெரியப்படுத்தி உள்ளனர். அவர்கள் சிக்கியுள்ள இடத்தில் தண்ணீர், மின் வசதி இன்றி தவித்து வருவதாகவும் மாணவர்கள் வேதனை அளித்துள்ளனர்.

ஐரோப்பிய நாட்டின் எல்லையை அடைவதற்கு சுமார் 1200 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டி உள்ளது என்றும் அவர்கள் கூறினர். உக்ரேனில் சிக்கியுள்ள தங்களை விரைந்து மீட்கவும் மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top