தடையை மீறி குவிந்த பக்தர்கள்! கோலாகலமாக நடைபெற்ற சத்திய ஞான சபை ஜோதி தரிசனம்!!
இன்றைய தினம் தமிழகத்தில் தைப்பூசம் பல கோவில்களிலும் கொண்டாடப்படுகிறது. இதனால் பக்தர்கள் பலரும் கோவில்களுக்கு நேரடியாக சென்று வருகின்றனர். ஒரு சில கோவில்களில் பக்தர்கள் நேரில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்றைய தினம் வடலூரில் உள்ள வள்ளலார் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
ஆயினும் பக்தர்கள் நேரில் சென்று குவித்ததாக தகவல் கிடைத்துள்ளது. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று கூறியவர் ராமலிங்க அடிகளார் இவர் வள்ளலார் என்றும் அழைக்கப்படுகிறார். அதன்படி இன்றைய தினம் தைப்பூச திருவிழாவை ஒட்டி வள்ளலார் நிறுவிய வடலூர் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் காட்டப்பட்டது.
வடலூர் சத்திய ஞான சபையில் ஏழு வண்ணத் திரைகள் நீக்கி, ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. பொதுமக்கள் ஜோதி தரிசனத்தை இணைய வழி மூலமாகவும் தொலைக்காட்சி மூலமாகவும் காண நேரடி ஒளிபரப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆயினும் தடையை மீறியும் சத்திய ஞானசபையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து பக்தி முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.
