நான்வெஜ் சாப்பிட முடியல!!அதனால இனி சனிக்கிழமை தடுப்பூசி முகாம்!!!

தமிழகத்தில் தடுப்பூசி செய்து கொள்வோரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் தடுப்பூசி மீது மக்களுக்கு நம்பிக்கை தோன்றியது என்றே கூறலாம்.

நம் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் தொடர்ச்சியாக தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி லட்சக்கணக்கில் செலுத்தப்பட்டன. இந்த நிலையில் தமிழகத்தில் சில வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி முகாம் அமைக்கப்படவில்லை.சுப்பிரமணியன்

அதனை தொடர்ந்து தற்போது இனி சனிக்கிழமை தடுப்பூசி முகாம் இருக்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார். அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இவ்வாறு கூறியுள்ளதாக காணப்படுகிறது.

ஏனென்றால் ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி செலித்துக்கொண்டால் நான்வெஜ் பிரியர்கள் அசைவம் சாப்பிட முடியவில்லை.அதோடு மட்டுமில்லாமல் தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் அன்றைய தினம் பெரும்பாலும் அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்துவர்.

அதனால் அசைவப் பிரியர்களின் கோரிக்கையை ஏற்று இனி தடுப்பூசி முகாம் தமிழகத்தில் சனிக்கிழமைதோறும் இருக்கும் என்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன்.

மேலும் இந்த பேட்டியில் அவரோடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment