சனிக்கிழமை விடுமுறை இல்லை.. பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை!

சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வரும் சனிக்கிழமை விடுமுறை இல்லை என பள்ளி கல்வித்துறை முதன்மை இயக்குனர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் சனிக்கிழமை விடுமுறை என்ற நிலையில் சமீபத்தில் மழை காரணமாக பல நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.

156689 school holidayஇந்த நிலையில் மழை காரணமாக விடுக்கப்பட்ட விடுமுறையை ஈடுகட்ட வரும் சனிக்கிழமை சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை இல்லை என்றும் அன்றைய தினம் திங்கட்கிழமை பாடத்திட்டத்தின்படி அனைத்து பள்ளிகளும் செயல்படும் என்றும் கல்வித்துறை முதன்மை இயக்குனர் அறிவித்துள்ளார்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தொடர் மழையின் காரணமாக சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அந்த பணி நாட்களை ஈடு செய்திடும் வகையில் டிசம்பர் 3ஆம் தேதி சனிக்கிழமை சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் திங்கட்கிழமை பாடவேளையினை பின்பற்றி முழு பணி நாளாக கருதி செயல்படவேண்டும் என அறிவிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.