விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஏழாயிரம் பண்ணை என்ற ஊர் இருக்கிறது .இதன் அருகே உள்ள மஞ்சள் ஓடைப்பட்டி என்ற கிராமத்தில் சிறிது நேரத்திற்கு முன் கடுமையான வெடி விபத்து நிகழ்ந்துள்ளது.
கருப்பசாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் இந்த விபத்து நடந்துள்ளது.
கருப்பசாமி என்பவருக்கு சொந்தமான தொழிற்சாலையில் 50 பேர் வேலை செய்து வருகின்றனர் இவர்கள் இன்று காலை தொழிற்சாலையில் வெடிக்காக ரசாயன மருந்து கலக்கும்போது அது வெடித்தது.
உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படையினர் காயமடைந்த 7 பேரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதில் பட்டாசு உரிமையாளர் கருப்பசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் செந்தில்குமார் என்பவரும் உயிரிழந்துள்ளார்.
இன்று காலை அப்பகுதியில் நடந்த இந்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியையும் அதனையொட்டிய பகுதிகளிலும் இது போல வெடி விபத்துக்கள் நடப்பது சர்வ சாதாரணமாகி விட்டது. இது போல் வெடி விபத்துக்கள் நடக்காமல் இருப்பதற்காக அரசு கொடுத்துள்ள விதிமுறைகளையும் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் முறையாக கடைபிடிப்பது இல்லை.