அல்வா கொடுத்து மயக்கிய அமாவாசை! – சத்யராஜ் நடித்த புகழ்பெற்ற அமைதிப்படை படம் வந்து இன்றோடு 28 ஆண்டுகள் நிறைவு!

புகழ்பெற்ற இயக்குனர் மணிவண்ணன் இயக்கத்தில் கடந்த 1994ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் அமைதிப்படை.

இந்த படத்தில் சத்யராஜ், கஸ்தூரி, விசித்ரா , மணிவண்ணன், தியாகு, சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

amaithippadai film copy.jpg1

சத்யராஜ் நடித்த படங்களிலேயே மிகப்பெரும் வரலாற்று சாதனை படைத்த படம் என இதை சொல்லலாம்.

இதில் தேங்காய் பொறுக்கும் அமாவாசையாக இருக்கும் பிச்சைகாரனாக வரும் சத்யராஜ் தன்னை ஏற்றி விட்ட அரசியல் தலைவர் மணிவண்ணன் முதல் பலரையும் ஏறி மிதித்துவிட்டு மேலேறி செல்லும் ஒரு வித்தியாசமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

அரண்மனை வீட்டு பெண்ணை அல்வா கொடுத்து மயக்கி ஏமாற்றி விடுவது போன்ற உச்சபட்ச வில்லன் வேலைகளை சத்யராஜ் இதில் செய்து இருந்தார்.

அதிக கிண்டலான அரசியல் வசனங்கள் இப்படத்தின் மிகப்பெரிய பலம். இரண்டு நாயகர்களாக சத்யராஜ் நடித்திருந்த இந்த படம் பெரும் வரவேற்பை பெற்றது

இளையராஜா இசையில் வந்த சொல்லி விடு வெள்ளி நிலவே பாடலும் மிகுந்த வரவேற்பை பெற்றது.

ஓட்டு எண்ணிக்கொண்டிருக்கும்போது ஓட்டு எண்ணிக்கை ஏற ஏற சத்யராஜின் மன நிலை மாறி பெரிய ஆளாக தன்னை தானே மாற்றிக்கொள்வதாக காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது.

சிறப்பாக அமைக்கப்பட்டிருந்த இந்த படம் மிகுந்த வெற்றியை பெற்றது. சத்யராஜ்க்கு இப்படம் ஒரு மைல் கல் இன்றுடன் இப்படம் ரிலீஸ் ஆகி 28 ஆண்டுகள் ஆகிறது. கடந்த 1994ம் ஆண்டு இதே நாளில் இப்படம் வெளியாகி வெற்றி பெற்றது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment