சத்தியமங்கலம் பண்ணாரியம்மன் சிறப்புகள்

3ddd584404ca093df5dadc143a67a5eb

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே வனப்பகுதியில் உள்ள சக்தி வாய்ந்த கோவில் பண்ணாரி மாரியம்மன் கோவில். இந்த கோவிலுக்கு தமிழ்நாடெங்கும் பக்தர்கள் கூட்டம் உள்ளது மிக சக்தி வாய்ந்த இந்த கோவிலில் விபூதி பிரசாதம் கிடையாது புற்றுமண்ணே பிரசாதமாக கொடுக்கப்படுகிறது.

கண்பார்வை கோளாறுகள், உடல் பிணிகள் அனைத்திற்கும் இங்குள்ள பண்ணாரி மாரியம்மன் கண்கண்ட தெய்வமாய் விளங்குகிறாள்.திருமண பாக்கியம், குழந்தை பிறப்பு என எல்லா வேண்டுதலையும் நிறைவேற்றி வைக்கிறாள் பண்ணாரி.

இந்த கோவிலின் அம்மன் இங்கு சுயம்புவாக முளைத்தது. இங்கு பெரிய கட்டைகளை போட்டு குண்டம் திருவிழா நடத்துவார்கள் அது மிகவும் இங்கு முக்கியத்துவமானது ஆகும்.

கேரளாவுக்கு பொதிமாடுகளை ஓட்டி சென்ற பெண் தான் பண்ணாரியாக இங்கு தங்கி விட்டதாக கூறப்படுகிறது. மிகவும் சக்தி வாய்ந்த இக்கோவிலுக்கு வாய்ப்பிருந்தால் ஒரு முறை சென்று வாருங்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.