மணிரத்னம் படத்தில் ஆஸ்தான நடிகர்.. ஐடி ஊழியராக இருந்து சினிமாவில் கால் பதித்தது எப்படி..

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’சத்யா’ என்ற திரைப்படத்தில் அமைதியான அதே நேரத்தில் அழுத்தமான வில்லனாக நடித்தவர் நடிகர் கிட்டி. ஒரு வில்லனால் இவ்வளவு அமைதியாக பல வில்லத்தனமான செயல்களை செய்ய முடியுமா என்று ஆச்சரியப்படும் அளவுக்கு அவரது நடிப்பு இருக்கும். சத்யா அவருக்கு ஒரு மைல் கல் என்றே கூறலாம்.

நடிகர் கிட்டி எம்பிஏ படித்தவர். அவர் ஒரு நிறுவனத்தையும் தொடங்கி நடத்தி வந்தார். அதன் பிறகு ஐடிசி உள்பட பல முன்னணி நிறுவனங்களிலும் வேலை செய்து வந்தார். 2002 ஆம் ஆண்டு ஒரு புகழ்பெற்ற சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்த நிலையில் தான் அவருக்கு தற்செயலாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. மணிரத்னம் இயக்கத்தில் உருவான நாயகன் என்ற திரைப்படத்தில் தான் அவர் நடிகராக அறிமுகமானார். அந்த படத்தில் அவர் ரத்தினவேல் நாயக்கர் என்ற கேரக்டரில் வித்தியாசமாக நடித்திருப்பார்.

இதனையடுத்து அவருக்கு என் தங்கச்சி படிச்சவ, நல்லவன் போன்ற படங்களில் வாய்ப்பு கிடைத்தாலும் மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்த படம் கமல்ஹாசனின் ’சத்யா’ தான். இந்த படத்தில் முதலில் கமல்ஹாசனுக்கு ஆதரவாக இருக்கும் ஒரு அரசியல்வாதி போல் நடித்து பின் திடீரென வில்லனாவார். அவரது உண்மையாக முகம் தெரியவர கமல்ஹாசனே அவரை பழிவாங்குவது தான் கதை.

ஒரு வில்லன் என்றால் ஆக்ரோஷமாக, ஆர்ப்பாட்டமாக இருக்க வேண்டும் என்ற விதியை மாற்றி, கத்தி துப்பாக்கியை எடுத்து தாக்க வேண்டும் என்ற தமிழ் சினிமாவின் ஃபார்முலாவையும் மாற்றியவர் தான் கிட்டி. மிகவும் அமைதியான பேச்சு, தெளிவான பார்வை அதே நேரத்தில் செய்யும் செயல் எல்லாம் வில்லத்தனம் என்ற அவரது கேரக்டர் இன்றும் ஆச்சரியப்படும் அளவுக்கு இருக்கும். சத்யா படத்தில் கிடைத்த மிகப்பெரிய புகழ் காரணமாக கமல்ஹாசனின் சூரசம்ஹாரம் படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்தார்.
Actor Kitty Movies List, Kitty Filmography, Kitty 9 Films

ரஜினியின் ராஜா சின்ன ரோஜா, விஜயகாந்த் நடித்த சந்தன காற்று, செந்தூரப்பூவே ஆகிய படங்களில் நடித்த அவர் ரஜினிகாந்த், மம்மூட்டி இணைந்து நடித்த தளபதி திரைப்படத்திலும் காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பார். ரஜினிகாந்த் மற்றும் மம்மூட்டி ஆகிய இருவரையும் சமாதானம் பேச அழைக்கும் பேச்சு வார்த்தையின் போது கிட்டி சூப்பராக நடித்திருப்பார்.

அதேபோல் பாட்ஷா திரைப்படத்திலும் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்த கிட்டி, பாட்ஷா என்ற பெயரை கேட்டதும் தன்னுடைய இருக்கையில் இருந்து அவர் எழுந்து நிற்கும் காட்சி என்றும் ஆச்சரியப்படும் அளவுக்கு இருக்கும். மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பம்பாய் படத்தில் நாயகி மனிஷா கொய்ராலாவின் தந்தையாக அவர் நடித்திருந்தார். மேலும் ரஜினிகாந்த் நடித்த அருணாச்சலம், கௌதம் மேனன் இயக்கிய முதல் படமான மின்னலே, ரஜினிகாந்தின் பாபா உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான ’பிச்சைக்காரன் 2’ என்ற படத்தில் கூட அவர் ஒரு சின்ன கேரக்டரில் நடித்திருப்பார். தற்போது 70 வயதாகும் நடிகர் கிட்டி இன்னும் தனது நடிப்பை தொடர்ந்து கொண்டிருப்பதுடன் ரசிகர்களையும் தனது நடிப்புத் திறனால் கட்டிப் போட்டும் வருகிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.