சதுரகிரி செல்லும்போது செய்யக்கூடாத செயல்கள்

விருதுநகர் மாவட்டமும் மதுரை மாவட்டமும் இணையும் மலையாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது.

இந்த கோவிலுக்கு கடந்த சில வருடங்களாக மக்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது.

கடந்த 2015ல் வெள்ளம் வந்ததை ஒட்டி நிறைய அசம்பாவித சம்பவங்கள் நடந்து விட்டதால் மாதம் இரண்டு முறை பிரதோஷம் அமாவாசை,பவுர்ணமி அன்று மட்டுமே மலையில் உள்ள சந்தனமகாலிங்கம்,சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த கோவிலுக்கு செல்லும் சில பக்தர்கள் செய்யும் தவறுகள் என்னவென்றால், ஆடிப்பாடிக்கொண்டு செல்வது கத்திக்கொண்டு செல்வது, செடிகளை ஒடிப்பது கல் எடுத்து எறிவது என சேட்டைகள் செய்யக்கூடாது.

ஏன் என்றால் இங்கிருக்கும் கல் கூட ஏதாவது ஒரு சித்தரை சுமந்துகொண்டு இருக்குமாம். அனைத்து சித்தர்களின் தலைமையகம் என இந்த சதுரகிரியை சொல்லலாம். மேலும் சித்தர்களும் சூட்சுமமாக இந்த மலையில் தவம் இருந்து வருவது உண்மை.

இங்கிருக்கும் செடிகளும் மிக புனிதமான செடிகளாக கருதப்படுகின்றன.இங்கு செல்லும்போது இது போல செயல்களை இப்புனித மலையில் செய்யாமல் சென்று வருவதே நலம் பயக்கும்.

மேற்கண்ட செயல்களால் சாபமும் தோஷமும் ஏற்படும் என்பது உறுதி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.