சதுரகிரி மலை கோவில் 4 நாட்களுக்கு மட்டும் திறப்பு

0f1db94753b8b71405440b1eb9ec4bce

விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டத்தோடு இணைந்த பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த புகழ்பெற்ற கோவிலிலும் இந்த மலையினிலும் 18 சித்தர்கள் வாசம் செய்வதாக ஐதீகம். ஏராளமான அதிசய சம்பவங்கள் தற்காலத்திலும் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

சுந்தரமகாலிங்கம் கோவில் அருகிலேயே சந்தன மஹாலிங்கம் கோவில் அதற்கு மேலே மலை ஏறினால் தவசிப்பாறை போன்றவற்றை காணலாம். இந்த கோவிலுக்கு கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக பக்தர்கள் கூட்டம் அதிகமாக வருகிறது. கீழிருந்து மலை மேலே ஏறி சென்றுதான் சுந்தரமகாலிங்கத்தை தரிசிக்க முடியும். செல்லும் வழியில் நீரோடைகள், அருவிகள் போன்றவை உள்ளன. மலை ஏறுவதற்கு 2 மணி நேரங்கள் ஆகும்.

இந்த மலையில் திடீரென காட்டாற்று வெள்ளம் வரும் அதில் சிக்கி சில பேர் உயிரிழந்துள்ளதாலும் கடந்த 2015ல் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் பலர் சிக்கிக்கொண்டதாலும் பக்தர்களுக்கு அமாவாசை, பெளர்ணமி நாட்களில் மட்டுமே மலை ஏற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

முன்பு எப்போது வேண்டுமானாலும் செல்லலாம் என்ற நிலை இருந்தது. தற்போது அமாவாசை மற்றும் பெளர்ணமி நாட்களுக்கு முன்னர் வரும் பிரதோஷ நாட்கள் அன்று பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு 4 நாட்கள் செல்ல அனுமதிக்கப்படுவர்.

இந்த நிலையில் தற்போது லாக் டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கோவில்கள் திறக்கப்படுகின்றன. ஆனி மாத அமாவாசையை ஒட்டி இன்றிலிருந்து இந்த மலைக்கு 4 நாட்கள் செல்ல அரசு அனுமதி அளித்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews