சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு! சிபிஐ புதிய மனு..!!

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 பேர் மீது கூட்டுச் சதி பிரிவில் வழக்கை பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என சிபிஐ மனுதாக்கல் செய்துள்ளது.

சிபிஐ தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் ஒன்றை செய்திருந்தார். அதில் சாத்தான் குளத்தை சேர்ந்த வியாபாரிகளான தந்தை, மகன் ஆகியோர் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டு பின்னர் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக சாத்தான் குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சிறப்பு காவல் ஆய்வாளர் உட்பட 9 பேர் மீது சிபிஐ கொலை வழக்கு பதிவு செய்து தற்போது வரையில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இபிஎஸ் வெளியே செல்லாதது ஏன்? – அமைச்சர் சேகர்பாபு!!

அதே போல் வழக்கில் 2 குற்றப்பத்திரிக்கைகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த சூழலில் 9 பேர் மீது கூட்டுச் சதி பிரிவில் வழக்கை பதிவு செய்ய நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தாக கூறப்பட்டது.

இந்நிலையில் 9 மீது குற்றங்கள் இருப்பதாகவும், போதிய ஆதாரம் இருந்தும் உரிய பிரிவில் பதிவு செய்யாமல் இருப்பது குற்றவாளிகள் தங்களுக்கு சாதகமான எடுத்துக்கொள்வார்கள் என மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை!!

இதற்கிடையில் வழக்கின் விசாரணை அமர்வானது இன்று வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 பேர் மீது கூட்டுச் சதி பிரிவில் வழக்கை பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்த நிலையில், வழக்கின் விசாரணை அமர்வானது வருகின்ற 11-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment