சாத்தான்குளம் மரண வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

துாத்துகுடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020ம் ஆண்டில் விசாரணைக்கு அழைத்து சென்ற போது கடுமையாக தாக்கி கொலை செய்த வழக்கானது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் வழக்கின் முக்கிய குற்றவாளியான ஸ்ரீதர் தூண்டுதலின் பேரில் போலீசார் கடுமையாக தாக்கியதாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

தாளாளர் பாலியல் தொல்லை: 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!!

இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில். அவர்கள் மீது கூட்டுசதி பிரிவுகளின் கீழ் சேர்க்க சிபிஐ போலீசார் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.

இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட 2-வது அறிக்கையின் படி, மதுரை நீதிமன்றம் கூட்டுசதி பிரிவுகளின் கீழ் சேர்க்கவும், நீக்கவும் கீழமை நீதிமன்றத்திற்கு உரிமையிருப்பதாக கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.