சாத்தான்குளம் வழக்கு… உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு..!!

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கு விசாரணையை முடிக்க இறுதியாக 4 மாதம் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சாத்தான்குளம் தந்தை-மகன் வழக்கு தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக 9 காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சாத்தான்குளம் வழக்கை மதுரை மாவட்ட நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்நிலையில் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கை விரைந்து விசாரிக்குமாறு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்து இருந்தார்.

இந்த சூழலில் வழக்கு விசாரணையானது இன்று வந்தது. அப்போது 105 சாட்சிகளில் 55 முதல் 60 சாட்சிகளே முக்கியமானவர்களாக அடையாளம் காணப்பட்டு இருப்பதாக நீதிபதி கூறினார்.

அதோடு குற்றவாளிகளாக கருதப்படும் ஒன்பது நபர்களிடம் குறுக்கு விசாரணை நடைபெறுவதால் கால அவகாசம் வழங்க வேண்டும் என மதுரை மாவட்ட நீதிமன்றம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தனது வாதங்களை முன்வைத்தார்.

இதனை ஏற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றம் சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கு விசாரணையை முடிக்க இறுதியாக 4 மாதம் கூடுதல் கால அவகாசம் வழங்கி மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.