பல வருடங்களுக்குப் பிறகு இயக்கத்தை கையில் எடுக்கும் சசிகுமார்…ஹீரோயின் இவங்களா…?

சசிகுமார், தமிழ்த் திரைப்பட இயக்குனர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். பாலா, அமீர் ஆகிய இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். 2008 ஆம் ஆண்டு வெளியான ‘சுப்பிரமணியபுரம்’ திரைப்படத்தின் மூலமாக இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகம் ஆனார்.

இவரது படங்கள் அனைத்தும் சமூக அக்கறையோடு இருக்கும். நட்பையும் நண்பர்களையும் பெருமை படுத்தி இவர் படங்களில் கூறியிருப்பார். ‘சுப்பிரமணியபுரம்’, ‘நாடோடிகள்’, ‘போராளி’, ‘சுந்தர பாண்டியன்’, ‘வெற்றிவேல்’ ஆகியவை இவர் நடித்த படங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.

பொதுவாக சசிகுமார் இயக்கினாலும் சரி நடித்தாலும் சரி அந்த படங்கள் குடும்பத்துடன் சென்று பார்த்து மகிழும் வகையில் இருக்கும். தற்போது இயக்கத்தில் இருந்து சற்று விலகி இருந்த சசிகுமார் நடிப்பில் வாய்ப்புகள் தொடர்ந்து வந்ததால் அதில் கவனம் செலுத்தி வந்தார்.

இந்த நிலையில், பல வருடங்களுக்கு பிறகு சசிகுமார் பெண்களை மையமாகக் கொண்டு திரைப்படம் ஒன்றை இயக்கப் போவதாகவும் அதில் நடிகை நயன்தாரா நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை நயன்தாரா இறுதியாக இந்தியில் நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து ‘ஜவான்’ படத்தில் நடித்து இந்தி சினிமாவில் அறிமுகம் ஆனார். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றிப் பெற்றது. அதைத் தொடர்ந்து அவரின் கணவர் விக்னேஷ் சிவன் இயக்கும் ‘எல்.ஐ.சி’ திரைப்படத்திலும், ‘தனி ஒருவன் 2’, ‘மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அடுத்ததாக சசிகுமார்- நயன்தாரா கூட்டணியில் திரைப்படம் உருவாக போவது ரசிகர்களிடையே மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் தூண்டி உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.