ஜெயலலிதா நினைவிடத்திற்கு சசிகலா செல்வது வீண் முயற்சி!!

தமிழகத்தில் வலிமையான கட்சியான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக கட்சி வருகின்ற 17 ம் தேதி பொன்விழா கொண்டாட உள்ளது. இந்த பொன் விழாவிற்காக அதிமுக கட்சி சார்பில் தலைவர்களின் நினைவு இடங்களுக்கு மரியாதை செலுத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று காவல்நிலையத்தில் மனு அளிக்கப்பட்டிருந்தது.

ஜெயக்குமார் பொன் விழா கொண்டாட உள்ள அதிமுக கட்சியில் அவ்வப்போது குழப்பங்கள் நிலவும்.இத்தகைய மத்தியில் மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் தோழி சசிகலா தற்போது ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு சென்று இருந்தார்.

ஜெயலலிதாவின் தோழி சசிகலா தொண்டர்கள் மத்தியில் சின்னம்மா என்று அழைக்கப்படுவார். இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

ஜெயலலிதா நினைவிடத்துக்கு சசிகலா செல்வது வீண் முயற்சி என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். அதிமுக பொன்விழாவை ஒட்டி சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இவ்வாறு பேசியுள்ளார்.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி நாகை மீனவர்கள் 23 பேர் கைது செய்யப்பட்டதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment