சசிகலா-ஜெயக்குமார்க்கிடையே வெடிக்கும் போர்! சசிகலாவின் நடிப்புக்கு ‘ஆஸ்கார்’ விருதே கொடுக்கலாம்!!

இன்றைய தினம் காலையில் மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் தோழி சசிகலா ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்றார். அவர் செல்லும் போது காரில் அதிமுக கொடி கட்டியபடி பயணித்தார்.சசிகலா

அவரின் வருகைக்கு தொண்டர்கள் மிகுந்த வரவேற்பு கொடுத்தனர். இந்த நிலையில் அவர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் கண்ணீரோடு மரியாதை செலுத்தினார். இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

அதன்படி சசிகலாவின் நடிப்புக்கு ஆஸ்கார் விருதே கொடுக்கலாம் என்று அவர் கூறினார். சசிகலா நினைப்பது எதுவும் நடக்கப் போவதில்லை என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

ஜெயக்குமார்யானை பலம் கொண்டிருந்த அதிமுகவை கொசு தாக்கி கொண்டிருப்பதாக சொல்வது நகைச்சுவை என்றும் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறினார். அதோடு மட்டுமல்லாமல் அதிமுகவில் சசிகலாவுக்கு இடமே இல்லை என்றும் அமமுக வில் இடம் தந்தால் ஆட்சேபமில்லை என்றும் ஜெயக்குமார் கூறினார்.

அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தியது சட்டமீறல் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.நேற்றைய தினமும் சசிகலாவை பற்றி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார். இதனால் சசிகலா மற்றும் ஜெயக்குமார் கிடையே தொடர்ந்து முரண்பாடு நிகழ்கிறது தெரியவந்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment