அதிமுகவில் சசிகலாவை இணைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது பாராளுமன்ற தேர்தலுக்கு முன் இணைய வாய்ப்புகள் உள்ளது – கிருஷ்ணகிரியில் ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் முன்னாள் எம்எல்ஏ கோவிந்தராஜ் பேட்டி
அதிமுகவில் ஒற்றை தலைமை தொடர்பான பிரச்சனையில் ஓபிஎஸ் இபிஎஸ் என இரு அணிகளாக தற்போது செயல்பட்டு வருகிறது இந்த அணிகள் சார்பில் மாவட்ட செயலாளர்கள் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர் அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்ட ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளராக முன்னாள் எம்எல்ஏ கோவிந்தராஜ் நியமிக்கப்பட்டார் அவரது தலைமையில் இன்று கிருஷ்ணகிரியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்குபிறகுசெய்தியாளர்களைசந்தித்தமாவட்டசெயலாளர்கோவிந்தராஜ்பேரறிஞர்அண்ணாபிறந்தநாளைகிராமங்கள்தோறும்சிறப்பாககொண்டாடும்வகையில்ஆலோசனைகள்மேற்கொள்ளப்பட்டதுஎன்றும்அதிமுகவில்ஒற்றுமையுடன்செயல்படவேண்டும்என்கிறஓபிஎஸ்எண்ணத்தைஏற்றுக்கொண்டுநாங்கள்ஓபிஎஸ்பின்னால்சென்றுள்ளோம்ஒற்றுமையுடன்செயல்பட்டுதமிழகத்தில்அதிமுகஆட்சிக்குவரஅதிமுகநிர்வாகிகள்ஒன்றிணைந்துவருகிறோம்
தற்போது இரு அணிகளும் ஒன்றிணியே வாய்ப்புகள் இல்லை என்று சொன்னாலும் எதிர்காலத்தில் நிச்சயம் ஒன்றிணைவோம். அதிமுகவில் சசிகலாவை இணைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது அதற்கான நேரம் பார்த்துக் கொண்டுள்ளோம். வருகின்ற பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அதற்கான வாய்ப்புகள் வரும் நிச்சயம் சசிகலா அதிமுகவில் இணைவர் என்கிற நம்பிக்கை உள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் வேப்பனஹள்ளி தொகுதியில் போட்டியிட்ட கேபி முனுசாமிக்கு எதிராக அவர் தோல்வி அடைய வேண்டுமென நான்கு கோடி ரூபாய் செலவிட்டதாக உள்ள குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த அவர் கடந்த 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் யாருக்கு எதிராக யார் செயல்பட்டார் என்பது அனைவருக்கும் தெரியும் எனக்கு எதிராக இங்கு உள்ள நிர்வாகிகளை அனைவரையும் கேபி முனுசாமி பென்னாகரம் தொகுதிக்கு அழைத்து சென்றார் என்பது அனைவரும் அறிந்ததே என்றும்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்கள் ஒதுக்கப்பட்டவர்கள் தற்போது இபிஎஸ் பின்னால் நிற்கின்றனர் ஆனால் ஜெயலலிதா அவர்களால் அவருடன் ஆசியால் உள்ள தொண்டர்கள் கட்சி நிர்வாகிகள் கட்சிக்காக சிறை சென்றவர்கள் இன்று நாங்கள் ஓபிஎஸ் பின்னால் நிற்பதாகவும் இந்த மாவட்டத்தில் உள்ள இபிஎஸ் அணியினர் அதிமுக அல்ல தனியார் கம்பெனி என்று தெரிவித்தார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் ஏராளமான இந்நாள் முன்னாள் அதிமுக நிர்வாகிகள் அமுமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.