Connect with us

சசிகலாவுக்கு மூச்சுத்திணறல்: மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்!

News

சசிகலாவுக்கு மூச்சுத்திணறல்: மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்!

b5a5712b30ed61088d9df70d81b0fc0e

கடந்த 2017 ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா பெங்களூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நிலையில் திடீரென அவருக்கு சுவாசப் பிரச்சினை காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு சிறையில் 2017ஆம் ஆண்டு முதல் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்த நிலையில் இம்மாதம் 27ஆம் தேதி அவர் விடுதலை ஆக போவதாக சிறை நிர்வாகத்திடம் இருந்து அதிகாரபூர்வமான தகவல் வந்தது

1d1adc2661bbfb4f04a69fe6d193ae26

சசிகலாவை வரவேற்க அவரது ஆதரவாளர்கள் தயாராக இருந்த நிலையில் திடீரென சற்று முன்னர் அவருக்கு சுவாசப் பிரச்சினை ஏற்பட்டதாகவும் இதனால் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது 

இதனையடுத்து சசிகலாவுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. சசிகலா விடுதலை ஆக இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில் திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top