சசிகலா புஷ்பா வீட்டின் மீது தாக்குதல்: திமுக கவுன்சிலர் கைது!!

தூத்துக்குடியில் பாஜக மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா வீட்டின் மீது தாக்குதல் நடத்தியதாக திமுக நகராட்சி கவுன்சிலர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

தூத்துக்குடியில் கடந்த 2 தினங்களுக்கு முன் பாஜக சார்பில் கிறிஸ்மஸ் பண்டிகை நடைப்பெற்றது. அப்போது பாஜக மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அதில் அமைச்சர் கீதாஜீவன் குறித்து தரக்குறைவாக பேசினார்.

மக்களே உஷார்! வரும் 25, 26ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு..!!

இந்த சூழலில் நேற்று அவருடைய வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் கற்களால் கொண்டு தாக்குதல் நடத்தினர். இதில் கார் மற்றும் வீடு சேதமடைந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த பாஜக நிர்வாகிகள் உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதன் காரணமாக திமுக கவுன்சிலர் உட்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதே சமயம் திமுக வழக்கறிஞர் அளித்த புகாரின் பேரில் சசிகலாபுஷ்பா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று முதல்! கொரோனா தடுப்பூசி திட்டத்தில் நாசி வழி மருந்தும் சேர்ப்பு!!

மேலும், சம்பவம் குறித்து சசிகலாபுஷ்பாவின் திமுகவினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தினால் திமுக – பாஜகவினர் இடையே மோதல்கள் முற்றியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.