சசிகலா மெரினா பயணம்! சுதாகரன் விடுதலை!! அடுத்தடுத்து அதிரும் அதிமுக!!!

தற்போது தமிழகத்தில் வலிமையான எதிர் கட்சியாக அதிமுக காணப்படுகிறது.தமிழகத்தில்  வலிமையான எதிர்க்கட்சியாக காணப்பட்டாலும் அதிமுக கட்சி தொடர்ச்சியாக குழப்பம் நிலவுகிறது.சசிகலா

ஏனென்றால் திடீரென்று யாரும் எதிர் பார்க்காத வண்ணமாக இன்றைய தினம் சசிகலா அதிமுக கொடி ஏற்றிய காரில் பயணம் செய்து, மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதாவின் நினைவிடம் சென்றுள்ளார்.

இதனால் அதிமுக கட்சிக்குள் சசிகலாவால் குழப்பம் ஏற்படும் நிலைமை காணப்படுகிறது.ஏனென்றால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் சசிகலாவிற்கு சின்னம்மா என்ற பெயரும் காணப்படுகிறது.சுதாகரன்

சசிகலாவின் பயணத்திற்கு அதிமுக தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தோடு வரவேற்றனர். இதோடு மட்டுமில்லாமல் சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை பெற்று வந்த சுதாகரன் தற்போது விடுதலை ஆனார்.

அவர் சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு மற்றும் 9 மாத சிறை தண்டனை முடிந்த நிலையில் இன்றைய தினம் விடுதலை ஆனார்.

இதனால் சசிகலாவின் நினைவிடம் பயணம் மற்றும் சுதாகரனின் சிறை விடுதலை ஆகிய இரண்டும் அதிமுக கட்சிக்குள் குழப்பத்தை உருவாக்கி உள்ளது.இவை கட்சிக்குள் மட்டுமில்லாமல் தொண்டர்கள் மத்தியிலும் மிகுந்த குழப்பத்தை உருவாக்கி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment