அதிமுகவில் சசிகலா இணைப்பு? ஓபிஎஸ் ஏற்கமாட்டார்!: ஆதிராஜாராம்
முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு முன்பு அதிமுக கட்சி இரட்டை தலைமையில் தான் செயல்பட்டு வருகிறது. அதன்படி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் அதிமுகவை இணைந்து நடத்துகின்றனர்.
இருவர் இணைந்து நடத்தினாலும் அதிமுக பெரும் பின்னடைவை சந்தித்து வருவது தெரிகிறது. ஏனென்றால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவினர் பல இடங்களில் தோல்வி பெற்றனர். அதோடு மட்டுமில்லாமல் அதிமுகவினர் மத்தியில் சசிகலா சின்னம்மா என்று அழைக்கப்படுகிறார்.
இதனால் சசிகலா இணைப்பு குரல் எழுந்துள்ளது. இது குறித்து எடப்பாடி பழனிசாமி சேலத்தில் உள்ள இல்லத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் சசிகலா இணைப்பிற்கு ஓபிஎஸ் ஏற்க மாட்டார் என்று ஆதிராஜாராம் கூறியுள்ளார்.
அதன்படி சசிகலாவை அதிமுகவில் சேர்க்கக் கோரும் தீர்மானத்தை ஓ.பன்னீர்செல்வம் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று ஆதிராஜாராமன் கூறியுள்ளார். சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர் ஓபிஎஸ்-இபிஎஸ் தலைமைக்கு ஆதரவாக ஏற்கனவே பல மாவட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
