என்னது சசிகலா அதிமுக பொதுச் செயலாளரா?தீபாவளி வாழ்த்தால் குழப்பத்தில் அதிமுக!

தற்போது தமிழகத்தில் எதிர்க்கட்சியாக உள்ளது அதிமுக. அதிமுக கட்சியில் சமீபகாலமாக பல்வேறு விதமான குழப்பங்கள் காணப்படுகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் வருகையை அடுத்து அதிமுக கட்சியில் தொண்டர்கள் மத்தியில் பிரிவினை உண்டாக்கி உள்ளது.அதிமுக

இந்த நிலையில் சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் என்று சொல்லி தீபாவளி வாழ்த்து அறிவித்துள்ளார். அதன்படி சூழ்ச்சிகளும் தீமைகளும் நம்மை விட்டு விலக நன்மையும் அன்பும் நாடிவர இன்பமாய் தீபாவளி கொண்டாடுவோம் என்று சசிகலா கூறியுள்ளார்.

இருள் நீங்கி ஒளி பிறக்கும் தினமாகவும், தீமைகள் அகன்று நன்மைகள் பெற பிரகாசிக்கும் தினமாகவும் தீபாவளி அமையவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மக்கள் முக கவசம் அணிந்து தடுப்பூசியை செலுத்தியும் தீபாவளியை கொண்டாட சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அனைவரது வாழ்விலும் வளமும் நலமும் பெருகட்டும் என்று வாழ்த்தி தீபாவளி வாழ்த்து உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர்  என்ற பெயரில் கட்சி லெட்டர்பேடில் சசிகலா தீபாவளி வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment