சசிகலா ஒரு Free Bird : அமைச்சர் ஜெயகுமார் காரசார பேச்சு !!

தென் மாவட்டங்களை தொடர்ந்து அடுத்ததாக சேலம் மாவட்டத்தில் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.  முன்னாள் முதலமைச்சர் தோழி சசிகலா தஞ்சாவூர், தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இரண்டு கட்டமாக சுற்றுப்பயணத்தை சமீபத்தில் நிறைவு செய்தார்.

அப்போது அதிமுக ஆதரவாளர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து வரும் ஏப்ரல் மாதத்தில் சேலம் செல்லும் சசிகலா அங்கு பல்வேறு கோவில்களில் தரிசனம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

அப்போது அதிமுக ஆதரவாளர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து பேசுவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சசிகலாவின் சுற்றுப்பயணத்தை அதிமுகவில் எந்த தாக்கமும் ஏற்படாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

ராயபுரம் காவல் நிலையத்தில் கையெழுத்துயிட்டபின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்தியா என்பது சுகந்திர நாடு யார் எங்கு வேண்டுமானாலும் போகலாம் என்றும் சசிகலா ஒரு Free Bird-என மறைமுகமாக கூறியுள்ளார்.

மேலும், அதிமுகவில் சசிகலாவை இணைப்பதற்கு வாய்ப்பு இல்லை என எடப்பாடி பழனிச்சாமி அண்மையில் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் அவரது சொந்த மாவட்டமான சேலத்தில் சசிகலா சுற்றுப் பயணம் செல்வது முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment