தமிழகத்தில் வலிமையான எதிர்க்கட்சியாக அதிமுக காணப்படுகிறது. இந்த அதிமுக நாளைய தினம் தமிழகத்தில் பொன் விழாவை கொண்டாட உள்ளது. இதன் மத்தியில் அதிமுகவிற்கு பொன் விழாவினை கொண்டாட அனுமதி வேண்டும் என்று அதிமுக தரப்பிலிருந்து மனு காவல்துறையிடம் அளிக்கப்பட்டிருந்தது.
மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் தோழியான சசிகலா திடீரென்று ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு புறப்பட்டுள்ளார். சென்னை தியாகராயர் நகரில் உள்ள இல்லத்தில் இருந்து அதிமுக கட்சியின் கொடி கட்டிய ஜெயலலிதாவின் காரில் சென்றார்.
இதனால் கட்சிக்குள் மிகுந்த குழப்பம் உண்டாகி உள்ளது. அவரின் காரை சுற்றி தொண்டர்கள் புடைசூழ பயணம் செல்கிறார். தான் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு முதன் முறையாக ஜெயலலிதா நடைபெறும் செல்கிறார் சசிகலா.
மெரினாவில் உள்ள அண்ணா, எம்ஜிஆர் நினைவிடங்களில் மரியாதை செலுத்துகிறார் சசிகலா. சசிகலாவின் வருகையையொட்டி எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளன.
அதிமுக பொன்விழா ஆண்டையொட்டி ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார் சசிகலா. அவரின் வருகையை ஒட்டி அதிமுக கொடி தொண்டர்கள் பலரும் வரவேற்கின்றனர்.