Connect with us

நேரில் ஆஜராக தயங்கும் சசிகலா..!! விலக்கு கோரி மனு தாக்கல்; ஏன்?

சசிகலா

செய்திகள்

நேரில் ஆஜராக தயங்கும் சசிகலா..!! விலக்கு கோரி மனு தாக்கல்; ஏன்?

நேரில் ஆஜராக தயங்கும் சசிகலா..!! விலக்கு கோரி மனு தாக்கல்; ஏன்?

சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த சில ஆண்டுகளாக சசிகலா, இளவரசி போன்றோர் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டனர். அதன் பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் அவர்கள் சிறையில் இருக்கும்போது சொகுசு வசதிகளுக்காக லஞ்சம் வழங்கியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக இன்று ஆஜராக சசிகலாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நேரில் ஆஜராக விலக்கு கோரி சசிகலா மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிகிறது. சசிகலா, இளவரசி ஆகியோர் லஞ்ச ஒழிப்புத்துறை பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.

சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக சசிகலா, இளவரசி ஆகியோர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இன்று வழக்கு விசாரணையின்போது சசிகலா, இளவரசி ஆகியோர் பெங்களூரு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவில்லை.

சசிகலா, இளவரசி அவருடன் மூன்று சிறைத்துறை அதிகாரிகள் ஆஜராக விலக்கு கோரி மனு தாக்கல் செய்யபட்டது. 3 பேரின் மனுக்களையும் ஏற்று கொண்ட நீதிபதி வழக்கை ஜூன் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top