அதிமுகவில் உரிமை கோர சசிகலாவுக்கு எந்த முகாந்திரமும் இல்லை!: ஓபிஎஸ் தரப்பு;

பத்தாண்டுகளாக ஆளும் கட்சியாக இருந்து தற்போது எதிர்கட்சியாக உருவாகியுள்ளது அதிமுக. அதிமுக கட்சிக்குள் சமீபகாலமாக பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகின்றன. குறிப்பாக அதிமுக பொன்விழாவை தொடங்கியது இந்த குழப்பம்.

ஓபிஎஸ்

ஏனென்றால் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அதிமுக கொடி ஏற்றிய காரில் ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்து மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா என்ற கல்வெட்டையும் திறந்து வைத்தார்.

இதனால் கட்சிக்குள்ளேயே முரண்பாடான கருத்துக்கள் உருவானது. இந்த நிலையில் அதிமுகவின் உரிமை கோர சசிகலாவிற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

அதன்படி பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கில் இவ்வாறு தரப்பு கூறியுள்ளது. அதிமுகவில் உரிமை கோர சசிகலாவிற்கு எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை என்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கூறியுள்ளனர்.

தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த தங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளதாக ஓபிஎஸ் தரப்பு கூறியுள்ளது. சசிகலா தரப்பு வாதங்களுக்காக வழக்கு விசாரணையை நவம்பர் 12ஆம் தேதி ஒத்தி வைத்தது உரிமையியல் நீதிமன்றம்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment