1 1/2 கோடி தொண்டர்களும் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பின்னால் தான் உள்ளனர். அவர் எங்கே சென்றாலும் தொண்டர்கள் கூட்டமும், கட்சியினர்களின் வரவேற்பும், ஓபிஎஸ் க்கு தான் உள்ளது. அதிமுக ஒன்றிணைய வேண்டும், 1 1/2கோடி தொண்டர்கள் ஒரே குடையின் கீழ் வரவேண்டும் என்ற ஓபிஎஸ்ன் குரல் அனைத்து தொண்டர்களின் மனதிலும் பாதிப்பு ஏற்படுத்தி, அதிமுக ஓபிஎஸ் தலைமையில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென அனைவருடைய மனதிலும் எண்ணமாக உள்ளது.
அதிமுக தொண்டர்களின் விருப்பம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான். ஆனால் அதிலிருந்து தனித்து நிற்பவர்கள் அதற்கான பலனை அனுபவிப்பார்கள். முன்னாள் அமைச்சர் உதயகுமார் அவ்வப்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டே இருப்பார். அதிமுக ஒன்றிணைய வேண்டும், ஜெயலலிதாவின் எண்ணம் போல் 100 ஆண்டுகள் நீடித்து நிலைக்க வேண்டும் என்பதே ஓபிஎஸ்ன் நோக்கமாக உள்ளது.
அதிமுக கட்சிக்கொடியும், ரெட்டை இலை சின்னமும் ஓபிஎஸ்டம் உள்ளதால் அதை நாங்கள் கைப்பற்ற தேவையில்லை. அதிமுக சிறிதளவு கூட பிளவுபடாமல் ஒன்றிணைக்க வேண்டும் என்ற ஓபிஎஸ் ன் விருப்பம் தான் தொண்டர்களின் விருப்பமாக உள்ளது. ஓபிஎஸ் எல்லா பதவிகளையும் வகித்து பார்த்து விட்டார். ஜெயலலிதாவால் இரண்டு முறை முதல்வராகவும், துணை முதல்வராகவும், அதிமுக பொருளாளராகவும், ஒருங்கிணைப்பாளராகவும், இருக்கும் அவருக்கு பதவி ஆசை இருக்க முடியுமா? எனகேள்வி எழுப்பி அவர் ,அதிமுக ஒன்றிணைய வேண்டும், 1 1/2கோடி தொண்டர்களும் ஒன்றாக வேண்டும் என்ற ஓபிஎஸ் எண்ணத்தின் படி அனைவரும் அவர் வழியைப் பின்பற்றி நடப்பார்கள்
தஞ்சையில் நாளை நடைபெற உள்ள அ.தி.மு.க ஓ.பி.எஸ் ஆதரவாளர் இல்ல திருமண விழாவையொட்டி வைத்துள்ள பிளக்ஸ் பேனரில் இரு மனம் இணையும் விழாவில் கூட்டுத் தலைமைகளே வருக அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஒ.பி.எஸ், துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், சசிகலா, தினகரன் ஆகியோரின் படத்துடன் கூட்டுத் தலைமைகளே வருக வருக என வரவேற்றுள்ளனர்