ஜெயலலிதா சமாதியில் சபதம் செய்த சசிகலா? என்ன சபதம் தெரியுமா?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆறாவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதிமுக தலைவர்கள் தொண்டர்கள் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இன்று ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

sasikalaஇந்த நிலையில் சற்று முன் சசிகலா ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்தார். அவருடன் அவருடைய ஆதரவாளர்கள் பேரணியாக வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள் என்றும் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்று என்னை பொறுத்தவரை தமிழக மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன் என்றும் அந்த ஒரு எண்ணத்தில்தான் ஜெயலலிதா செயல்பட்டார் என்றும் தெரிவித்தார்.

ஜெயலலிதா வழி தான் என்னுடைய வழி என்றும் எனக்கு என்று தனி வழி கிடையாது என்றும் நாட்டு மக்களுக்காக நான் எப்போதும் குரல் கொடுத்து வருகிறேன் என்றும் தெரிவித்த சசிகலா, ஆளும்கட்சி செய்ய மக்கள் திமுகவுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கின்றார்கள் என்றும் அதை சரிவர செய்ய வேண்டியது அவர்களது கடமை என்றும் மக்கள் உங்களை நம்பித்தான் இந்த ஆட்சியை கொடுத்து இருக்கிறார்கள் நீங்கள் மக்களுக்கு துரோகம் செய்யக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அதிமுக மீண்டும் ஒன்று சேரும் என்றும் விரைவில் அனைவரும் ஒன்று சேர்வோம் என்றும், நான் அனைவரையும் ஒன்று சேர்ப்பேன் என்றும் அவர் சபதம் எடுத்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.