News
டிஸ்சார்ஜ் ஆனார் சசிகலா: இனிப்பு வழங்கி கொண்டாடிய அமமுக தொண்டர்கள்!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற நிலையில் கடந்த 27ஆம் தேதி அவர் சிறையிலிருந்து விடுதலையானார்
இருப்பினும் அவர் பெங்களூர் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவந்தார். கொரோனா தொற்று உள்பட ஒருசில பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக ஏற்கனவே தகவல்கள் வெளிவந்தன
இந்த நிலையில் சற்று முன் பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் இருந்து சசிகலா டிஸ்சார்ஜ் ஆனார். இதனை அடுத்து அமமுக தொண்டர்கள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்
மருத்துவமனையிலிருந்து இன்று சசிகலா டிஸ்சார்ஜ் ஆனாலும் இன்னும் ஒரு சில நாட்கள் அவர் பெங்களூரில் தங்கியிருப்பார் என்றும் அதன் பின்னர் பிப்ரவரி முதல் வாரம் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சசிகலாவின் சென்னை வருகையை அடுத்து அதிமுகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
