Connect with us

அதிமுகவை காப்பாற்ற நானும், சசிகலாவும் இணைவது உறுதி? – டி.டி.வி.தினகரன்

admk ammk

தமிழகம்

அதிமுகவை காப்பாற்ற நானும், சசிகலாவும் இணைவது உறுதி? – டி.டி.வி.தினகரன்

அதிமுகவை காப்பாற்ற நானும், சசிகலாவும் இணைவது உறுதி? – டி.டி.வி.தினகரன்

தமிழகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது.  இதனால் சசிகலாவை மீண்டும் இணைக்கவேண்டும் என ஓபிஎஸ் கூறியது அதிமுக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சென்னையில் செய்தியாளர்களிடம் சந்தித்து கூறியதாவது:

தேனி மாவட்டத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் என்னையும், சசிகலாவையும் அ.தி.மு.க கட்சியில் இணைக்க வேண்டும் என வலியுறுத்தியதாக கூறினார். இருப்பினும் ஒட்டுமொத்த அ.தி.மு.க. வினரும்  என்ன முடிவு எடுக்கப்போகிறார்கள் என்பதை பொருத்து இருந்துதான் பார்க்க வேண்டும் என கூறியுள்ளார்.

ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை அ.ம.மு.க. தமிழகத்தில் கொண்டுவர முயற்சி செய்வதே தவிர அ.தி.மு.க.வை கைப்பற்றும் எண்ணம் ஒருபோதும் இல்லை என தெரிவித்துள்ளார்.

இதனிடையே அ.தி.மு.க. கட்சிதான் இது பற்றி முடிவு எடுப்பார்கள் என்றும் தனிப்பட்ட முறையில் நான் எந்த முடிவும் எடுக்கபோவதில்லை என கூறினார். அதிமுக- வின் தொடர் தோல்வில்  காரணமாக தான் அ.தி.மு.க. நிர்வாகிகள் இவ்வாறு கூறியதாக தெரிவித்தார்.

மேலும், தேர்தலில் நாங்கள் தோற்றிருக்கலாம் ஆனால் நிச்சயமாக வலுவான இயக்கமாக உருப்பெற்று ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் நிலைநாட்டுவோம் என தெரிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top