Connect with us

‘சின்னம்மா’ என அழைத்த ஓபிஎஸ்… சசிகலா ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?

சசிகலா ஒபிஎஸ்

செய்திகள்

‘சின்னம்மா’ என அழைத்த ஓபிஎஸ்… சசிகலா ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?

‘சின்னம்மா’ என அழைத்த ஓபிஎஸ்… சசிகலா ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?

தன் மீது மரியாதை வைத்திருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் கூறியது, உண்மையின் வெளிப்பாடு என சசிகலா தெரிவித்துள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் தனது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. தமிழகத்தின் முன்னாள் துணை முதல்வரும், அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வமும் நேற்று ஆஜராகி பரபரப்பான வாக்கமூலம் அளித்தார்.

அதனை தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, “ஆறுமுகசாமி ஆணையத்தில் உண்மையான பதில் அளித்துள்ளேன். ஜெயலலிதா மரணம் குறித்து அரசின் சார்பாக நியமிக்கப்பட்ட ஆணையத்தில் நேற்றும், இன்றும் ஆணையம் என்னிடம் கேட்ட கேள்விகளுக்கு உரிய பதிலை அளித்துள்ளேன். அதோடு, எதிர்தரப்பு என்னிடம் கேட்ட கேள்விக்கும் உரிய மற்றும் உண்மையான பதிலை அளித்துள்ளேன். ஜெயலலிதா மரணத்தில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை, சசிகலா மீது அன்றும், இன்றும் மரியாதை உள்ளது எனத் தெரிவித்திருந்தார். மேலும் பேட்டியில் அவர் சின்னம்மா என குறிப்பிட்டு பேசியது அதிமுகவினர் இடையே சர்ச்சையை உருவாக்கியது.

இந்நிலையில் சசிகலா இன்று தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார், அப்போது பேசிய அவர், எனக்கு உடல்நிலை சரி இல்லாத போது கட்சி தொண்டர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் வேண்டுதல் வைத்திருந்தனர். அதனை நிறைவேற்ற கோயில்களுக்கு சென்று வந்தேன்

சென்ற இடம் அனைத்திலும் பொதுமக்கள் அன்போடு பழகினார்கள். கடவுளுக்கு தெரிந்த உண்மை ஓ.பன்னீர்செல்வத்தின் மூலம் நேற்று மக்களுக்கும் தெரிந்துள்ளது. எது உண்மையோ அதனை மாற்ற முடியாது, திரையிட்டு மறைக்க முடியாது எனத் தெரிவித்தார்.

அதிமுக தரப்பிடமிருந்து இதுவரை எந்தவித சமிஞ்சையும் வரவில்லை, அதற்காக எனக்கு வருத்தமும் இல்லை. எம்.ஜி.ஆருக்கு பிறகு ஜெயலலிதா தனியாக தான் இருந்தார். நாங்கள் அவருடன் இருந்து ஆட்சியமைத்தோம்

உங்கள் மீது தனிப்பட்ட முறையில் மரியாதை இருக்கிறது என ஓ.பன்னீர்செல்வம் கூறிய கேள்விக்கு அவர் உண்மையை சொல்லியிருப்பதாக சசிகலா பதில் பொதுமக்களுக்கு உண்மை தெரியவேண்டும் என்பதற்காக ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது சரி தான் என அன்றைக்கே சொல்லியுள்ளேன் என்றும் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top