Entertainment
சசிக்குமார் சமுத்திரகனி மீண்டும் இணையும் படம்
தனது சுப்ரமணியபுரம் படத்தில் அட்டகாசமான வில்லன் வேடத்தை சமுத்திரக்கனிக்கு கொடுத்தார் இயக்குனர் சசிக்குமார். தொடர்ந்து போராளி , நாடோடிகள் உள்ளிட்ட படங்களில் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிக்குமார் நடித்தார்.

இதில் நாடோடிகள் திரைப்படம் மஹா மெஹா ஹிட்டானது. பரபரப்பான திரைக்கதையால் இப்படம் புகழ்பெற்றது.
இதை தொடர்ந்து நாடோடிகள் 2 தயாராகி வருகிறது இருப்பினும் அது நீண்ட நாள் கிடப்பில் உள்ளது.
தற்போது சமுத்திரக்கனி இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் சசிக்குமார் நடிக்கிறார். ப்ரொடக்சன் நம்பர் 5 என்று மட்டும் வைத்துள்ள படக்குழுவினர் இன்னும் படத்துக்கு பெயர் வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளனர். தனது நாடோடிகள் பட நிறுவனம் மூலம் சமுத்திரக்கனியே தயாரிக்கிறார்.
