Entertainment
‘சர்கார்’ படத்திலும் ‘ஒரு ஆளப்போறான் தமிழன்’ பாடல்?
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கிய ‘மெர்சல்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஆளப்போறான் தமிழன்’ பாடல் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆனது. இந்த நிலையில் ‘இதேபோன்ர ஒரு பாடலை விஜய் நடித்து வரும் அடுத்த படமான ‘சர்கார்’ படத்திலும் கம்போஸ் செய்ய ஏ.ஆர்.ரஹ்மான் முடிவு செய்துள்ளாராம்
அதுமட்டுமின்றி ‘சர்கார்’ படம் குறித்து இன்னொரு ஆச்சரியமான தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் அரசியல்வாதிகளாக பழ.கருப்பையா மற்றும் ராதாரவி நடித்து வருகின்றார்கள் என்பதும் இவர்கள் இருவர் தான் இந்த படத்தின் வில்லன்களாக இருக்கும் என்றும் இதுவரை கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஒரு டுவிஸ்ட்டாக இந்த படத்தில் ஒரு மெயின் வில்லன் இருப்பதாகவும், அந்த வில்லன் கேரக்டரில் நடிப்பது குறித்து ஒரு ஆச்சரியமான தகவல் விரைவில் வெளிவரும் என்று கூறப்படுகிறது
‘விஜய், கீர்த்திசுரேஷ், வரலட்சுமி, யோகிபாபு உள்பட பலர் நடித்தும் வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வரவுள்ளது.
