Connect with us

ஒரு ரூபாய்க்கு புடவை!! துணிக்கடையில் அலைமோதிய கூட்டத்தால் பரபரப்பு!!

fashionsilk

தமிழகம்

ஒரு ரூபாய்க்கு புடவை!! துணிக்கடையில் அலைமோதிய கூட்டத்தால் பரபரப்பு!!

கிருஷ்ணகிரியில் ஒரு ரூபாய்க்கு புடவை என்று விளம்பரம் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து இன்று அதிகாலை முதலே மக்கள் கடைகளில் குவிய தொடங்கியுள்ளனர்.

கிருஷ்ணகிரியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா என்ற பிரபல ஜவுளி கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில், இன்று ஓராண்டு நிறைவடைந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக கடைக்கு வரும் முதல் 500 பெண்களுக்கு ஒரு ரூபாய்க்கு புடவை வழங்கப்படும் என்ற திட்டத்தை அறிவித்தது. இதனால் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் அதிகாலை முதலிலே குவிந்தனர்.

இதனிடையே கடை திறக்கப்பட்டதை தொடர்ந்து ஒருவரையொருவர் முந்திக்கொண்டு கடைக்குள் நுழைந்தனர். அப்போது பெண்களுக்கு இலவச புடவைகள் வழங்கப்பட்டது.

அதே போல் ஆண்களுக்கு பேண்ட் ஷர்ட் வழங்கப்பட்டது. இதனால்  ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஜவுளி கடையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top