தீபாவளி ரேஸில் முன்னாடி வந்த சர்தார்! அடிவாங்கிய பிரின்ஸ் !

கார்த்தி தற்போழுது மித்ரன் இயக்கத்தில் சர்தார் படத்தில் நடித்து வருகிறார்.இந்தப் படம், ஆக்டேன் ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ளது.ஜிவி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்தில் ராஷி கண்ணா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் ரஜிஷா விஜயன், சங்கி பாண்டே, லைலா, முரளி சர்மா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மேலும் சிறப்பாக பிரபல நடிகை லைலா இப்படம் மூலம் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்தியின் சர்தார் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற அக்டோபர் 21ஆம் தேதி திரைக்கு வருகிறது.

உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் சார்பாக இந்த படத்தை வெளியிடுகிறார்.

sarthaaee

சிம்புவின் பத்து தல படத்தில் இருந்து வெளியான லேட்டஸ்ட் போட்டோஸ்!

அதே தீபாவளிக்கு சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் உருவாகும் பிரின்ஸ் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ஜோடியாக நடிகை மரியா எனும் உக்ரைன் நாட்டு நடிகை நடித்து வருகிறார்.தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த தீபாவளிக்கு சிவகார்த்திகேயன் மற்றும் கார்த்தி ஆகியோரின் திரைப்படங்கள் நேருக்கு நேர் மோதிக்கொள்ள உள்ளது , பிரின்ஸ் படத்தை மதுரை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட உள்ளது.

தீபாவளிக்கு ஈஸியா வீட்டுலே ரவாலட்டு பண்ணலாமா! ரெசிபி இதோ!

சர்தார் படத்துக்கு தான் அதிக அளவிலான தியேட்டர்கள் ஒதுக்கபட்டுள்ளது. பிரின்ஸ் படத்திற்கும் 600 தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ள நிலையில் சர்தார் படத்துக்கு அதுக்கு அதிகமான தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment