
பொழுதுபோக்கு
சார்தார் படத்தின் அடுத்த அப்டேட்!.. டீசர் எப்போ தெரியுமா ?..
நடிகர் கார்த்தி 2005ஆம் ஆண்டு பிரியாமணியுடன் பருத்தி வீரன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் இந்த படம் பல விருதுகளையும் குவித்தது.அடுத்தடுத்து செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, சகுனி என படங்களில் ரசிகர்களின் மனதை வென்ற நல்ல ஹீரோவாக நடித்துள்ளார்.
கார்த்தி தற்போது விருமன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்தப் படத்தில் ஹீரோயினியாக பிரபல இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடித்துள்ளார்.இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி, அதாவது விநாயகர் சதுர்த்திவிடுமுறை நாளில் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாகிறது.
இதை அடுத்து சர்தார், பொன்னியின் செல்வன், கார்த்தி 24, கார்த்தி 25 என அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வரும் கார்த்தி பிசியாக நடித்து வருகிறார்.சர்தார் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கும் ராஷி கண்ணா மற்றும் லைலா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தை வரும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது முதல் லுக் போஸ்டரில் கார்த்தி வயதான தோற்றத்தில் இருப்பது போல போஸ்டர் வடிவமைக்கப்பட்டு, அனைவரின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் பருத்திவீரன் தொடங்கி கார்த்தி 25 வரை தனது வெற்றி படங்களை நடித்த நடிகர் கார்த்தி வருகிற 25-ஆம் தேதி தனது 44-வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார்.
ஹீரோயின் காலை பிடிக்க மாட்டேன் – கோவத்தில் ரஜினி !!.. வெளிவந்த உண்மை ..
அன்று சர்தார் படத்தின் அடுத்த முக்கியமான அப்டேட் ஒன்றை வெளியிட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இதனால் படத்தின் முதல் சிங்கிள் பாடல் அல்லது டீசர் என ஏதேனும் ரிலீஸாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
