Connect with us

தி லெஜண்ட் படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றிய சரவணன்! ரிலீஸ் எப்போ தெரியுமா?

MV5BZGVjNDVlNjMtNTA0OC00OGZhLWI2MTctMjZiMzUxYzZlMDM5XkEyXkFqcGdeQXVyODEyNjEwMDk@. V1 1

பொழுதுபோக்கு

தி லெஜண்ட் படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றிய சரவணன்! ரிலீஸ் எப்போ தெரியுமா?

பிரபல தொழிலதிபரான சரவணா ஸ்டோர் உரிமையாளர் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்து ‘தி லெஜெண்ட்’ படத்தில் அறிமுகமாகியுள்ளார். சுமார் 100 கோடி மதிப்பீட்டில் உருவான இந்த திரைப்படத்தை‌ பிரபல இயக்குனர்‌ ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் தி லெஜெண்ட் சரவணன் உடன் இணைந்து மறைந்த காமெடி நடிகர் விவேக், ரோபோ ஷங்கர், பிரபு, விஜய் குமார், நாசர், மையில் சாமி மற்றும் கோவை சரளா, யாஷிகா ஆனந்த் என முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

maxresdefault 45

இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். படத்தில் உள்ள வாடிவாசல் பாடல் நான்கு நாள்களில் ஒரு கோடி பார்வையாளர்களைக் கடந்து சாதனை புரிந்துள்ளது.‘மொசலோ மொசலு’ 12 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து யூ டியூபில் பாடல் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

லெஜண்ட் சரவணன் அவர்களை ட்ரோல் செய்யபவர்கள் ஒருபுறம் இருக்க, மற்றொரு புறம் அவரது படத்துக்கு பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது,இந்நிலையில் இந்த படம் ஜூலை 15 வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

ஆனால் அதே நாளில் ‘ஒத்த செருப்பு படத்தை தொடர்ந்து இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் இரவின் நிழல் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் 96 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது.

org 73165202204071525

இந்த படமும் ஜூலை 15 வெளியாகும் என அறிவிக்க பட்டிருந்தது, ஆனால் தற்போழுது லெஜெண்ட் அண்ணாச்சி படத்தின் தேதியை மாற்றியுள்ளார். படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

ஷாருக்கானுடன் மொத தயாராகிய விஜய்சேதுபதி! எந்த படத்தில் தெரியுமா?

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் – இந்தியா திரைப்படமாக இந்த படம் வெளியாக உள்ள நிலையில் தற்போழுது இந்த படம் ஜூலை 28-ஆம் தேதி வெளியாக இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top